பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து மூண்ட இந்தியா-பாகிஸ்தான் போர் அமெரிக்காவின் தலையீட்டாலேயே முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இதை அவர் பலமுறை கூறியும் இந்திய தரப்பில் உரிய விளக்கம் வெளிவரவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உலக அரங்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்னென்ன விசயங்களை செய்துள்ளார் என பாருங்கள்.
இந்தியா-பாகிஸ்தான் போரை போல் பல போர்களை நிறுத்தியவர் அவர். ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை நிறுத்த தீவிரத்துடன் அவர் பணியாற்றி வருகிறார்” என கூறினார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ந்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட்டும் இதனை கூறத் தொடங்கியுள்ளார்.
























