மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(7-08-2025)
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சமஸ்டி முறையில் அதிகார பகிர்வு வேண்டி வடக்கு கிழக்கில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் 7ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அந்தோனியார் புரம் கிராமத்தில் மெசிடோ நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தல் உடன் முன்னெடுக்கப்பட்டது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீள பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை” நோக்கமாகக் கொண்டு மக்கள் அணியின் திரள் செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டது.
கடந்த 3 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நூறு நாள் செயல்திட்டத்தில் முதல் நாள் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து நூறு நாள் செயல் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அந்தோனியார் புரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கலந்து கொண்டனர்.
























