தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் கட்சிக்காரர்கள் படிவங்களை பெற்று விண்ணப்பித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக திமுக-வினர் மொத்தமாக படிவங்களை பெற்று நிரப்பி வருவதாக அதிமுக மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பூத் ஏஜெணடுகள் தினமும் 50 படிவங்களை பெற்று வழங்க அனுமதி. பூத் ஏஜெண்டுகள் நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்வாடி நிலை அலுவலர்களிடம் அளிப்பர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் தன்னால் சரிபார்க்கப்பட்டு திருப்தி என உறுதி அளிப்பர். இறுதியாக வாக்காளர் பதிவு அலுவலகர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
























