பு.கஜிந்தன்
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுவரி நிலையத்தின் அதிகாரி ஒருவரே இவ்வாறு கூட்டத்தில் உறங்கியுள்ளார்.
பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில், முன் வரிசையில் இருந்தே உறங்குகிறார் என்றால் அவரது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என விசனம் வெளியிடப்படுகிறது.























