யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் “வீரத்தமிழ் பொங்கல் விழாவானது 11ம் திகதி புதன்கிரமை அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது முட்டி உடைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய கிராமிய விளையாட்டுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஆரம்பத்தில் விருந்தினர்கள் பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து மாலை அணிவித்து, மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன. தொடர்ச்சியாக மாணவர்களது ஆடல் – பாடல் உள்ளிட்ட பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம், பேராசிரியர் சற்குணராசா, பேராசிரியர் ரகுராம், இசைவாணர் கண்ணன், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, திரு.இராதேயன், தாயக பாடகர் ஜெயா சுகுமார், எழுத்தாளர் தீபச்செல்வன், சின்னப்பா நாகேந்திரராசா, கந்தப்பு ஜெயந்தன், சாந்தலிங்கம் கோகுலன், ஸ்ரீ நிர்மலன், சிந்துமயூரன் பிரியங்கா, உதயசீலன் கில்மிஷா, கனகராஜ் அஷானி உள்ளிட்டோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பொங்கல் விழாவானதா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தர்மசீலன் யதுர்சன் தலைமையிலும், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் கனகசூரியன் கவிதரன் தலைமையிலும் இடம்பெற்றது. இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
























