வேழ முகனை வருந்தித் துதித்திடப்
பேழை வயிற்றோன் பெருநிதி தந்தே
கணங்கள் நெருங்கிடாக் காத்திடும் காவல்
கணபதி என்கவிக்குக் காப்பு.
வருத்தலைவி ளான்பதி வான்புகழ் பூமி;
மருத மரத்தின் மடியிலே தான்தோன்றி
முத்திரை காட்டும் விநாயகத் தேவனை
நித்தமும் சேவித்தல் நன்று.
முருகனின் அண்ணனே மோதகப் பித்தா
கரும்புடன் தேனையும் காரௌ கலந்துமே
காலம் தவறிடாக் காணிக்கை தந்தனை
கோலம் குறைவறக் காத்து.
குளக்கரை மாமருதில் கோலமாய்க் நின்று
விளக்குகள் ஏற்றி வணங்குவோர் விக்கினம்
போக்கும் துதிக்கைப் பகவனை வேண்டினால்
நீக்குவான் மாறிடா நோய்.
பார்வதி மைந்தனே பானை வயிற்றனே
சோர்வுடன் வந்தவர் சோகம் அறிந்தே
பரிவுடன் பாசமாய்ப் பாதுகாத் திட்ட
கரி;முகக் காட்சியைக் காட்டு.
ஆக்கம்
பாவலர் மார்க்கம் சந்திரன் வேலா
416 844 7453






















