செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
12 வது தேசிய மாநாட்டுப் பிரகடனம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12 வது தேசிய மாநாடு ன வவுனியாவில் நடைபெற்று இருக்கும் வேளையில் கட்சியின் புதிய தலைவர் தெரிவு இடம்பெறும் எனவும் செல்வம் அடைக்கலநாதனிடமிருந்து தலைவர் பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் கட்சியின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தீவிரமாக முடிவெடுத்துள்ளதாகவும் அறியப்பெறுகின்றது.
இந்த மாநாட்டை யொட் வெளியிடப்பெற்றுள்ள பிரகடன அறிக்கையில் பல புதிய விடயங்கள் புகுத்தப்பெற்றுள்ளன என்றும் எமது வவுனியாச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
ஈழத் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு பிரதேசத்தை உள்ளடக்கிய எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடிய மீளப் பெறப்பட முடியாத பூரண அதிகாரம் உடைய சமஸ்டி முறையிலான சுயாட்சி அலகொன்றை அரசியல் தீர்வாக பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்து அரசியல் ரீதியாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும்
எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொள்ளும் வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச சக்திகளோடு ஒன்றிணைந்து செயல்படவும்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்
எமது தாயக மண்ணில் அரச இயந்திரங்களினால் தொடர்ந்தும் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்கவும் மேலதிகமான அபகரிப்புகளை தடுக்கவும் தொடர்ந்து உரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும்
நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் வரையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள மாகாண சபை முறைமையை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை விரைந்து நடத்த தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்
எமது மக்களின் நலிந்து போன பொருளாதாரத்தை மீளக் கட்டியமைக்கும் முகமாக, பலதரப்பட்ட முதலீடுகளின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய இனக்குடிப் பரம்பலை பேணக்கூடிய தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதற்கான அனைத்து வேலை திட்டங்களையும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தவும்
எமது சமுதாயத்தின் உள்ள அனைத்து தரத்தினரதும் வாழ்க்கை தரத்தினையும் சமூக மேம்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும்
அனைத்து வேலை திட்டங்களையும் நடைமுறைச் சாத்தியமான வகையில் முன்னெடுப்பதற்கு சர்வதேச நேச சக்திகளை ஒருங்கிணைக்கவும் உரிய வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவும்
தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் எமது பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்பும் அனைத்து வேலை திட்டங்களையும் அயராத முன்னெடுக்கவும்
இப் பிரகடனம் விதந்துரைக்கிறது.
இதே நேரம் வவுனியாவில் வெ ளியிடப்பெற்றுள்ள துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் தலைவர் செல்வம் அடைக்கலடநாதனின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பாக அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டாலும் அவருக்கு எதிரான நடவடிக்கையை கட்சி இனிவரும் நாட்களில் எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





















