பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை தர வேண்டுமென பாமகவின் சட்டசபை குழு தலைவர் சவுமியா அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சி தோல்வியடைய முக்கிய காரணமே பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் தான். ஆனால் அதே நிலை தான் இன்றும் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றகங்ளில் பொறுத்தது போதும், பொங்கி எழ வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை தர வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் 2 ஆறுகள் ஓடியும் குடிக்க சுகாதாரமான நீர் இல்லை. தருமபுரி-காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






















