நடிகர் சாந்தனு முதல் அமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மேலும் பல வெற்றிகளும், மகிழ்ச்சியான தருணங்களும், புன்னகைக்கப் பல காரணங்களும் அமைய வாழ்த்துகிறேன் . இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் அண்ணா.
மேடையில் நீங்கள் சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் என் நினைவில் உள்ளன: “சாந்தனு, நீ எப்போதும் என் பிரார்த்தனைகளில் இருக்கிறாய்” நமது இந்த சகோதரத்துவ பிணைப்புக்கும், நாம் பகிர்ந்துகொண்ட தருணங்களுக்கும், இதிலுள்ள அனைத்துக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















