காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. அதேவேளை, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பின்னர், அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்பட பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. ஒப்பந்தப்படி பணய கைதிகள் ஒப்படைப்பு, ஹமாஸ் ஆயுதக்குழு ஆயுதங்களை கைவிட வேண்டும், காசா நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். காசா நிர்வாகத்தை ஐ.நா. ஆதரவு பெற்ற பாலஸ்தீன குழு நிர்வகிக்கும், காசாவில் இருந்து இஸ்ரேல் படையினர் வெளியேற வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இரு தரப்பும் இந்த ஒப்பந்தத்தை மெல்ல அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாசின் இந்த அறிவிப்பு எந்தவித அர்த்தமும் இல்லாத அறிவிப்பு என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

















