மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தால் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரும் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடுத்தது. அத்துடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை குறிவைத்தும் தாக்கியது. மறுபுறம் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயும் பயங்கர தாக்குதல்கள் நடந்தன. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்த போர் ஈரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்தது. அது மட்டுமின்றி வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் பாதித்தது. இடையில் ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கி இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பை சந்தித்தன. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து சர்வதேச நாடுகளில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
சுமார் 40 நாட்கள் தீவிர தாக்குதலுக்குப்பின் இருதரப்பும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தன. பின்னர் பெரும் முட்டுக்கட்டைகளுக்குப்பின் கடந்த மாதம் 17-ந்தேதி ஈரான்-அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதற்கிடையே போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் அடக்க சடங்குகளும் ஈரானில் தொடங்கின. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த இறுதிச்சடங்குகள் இன்றுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து காமேனி பிறந்த மசாத் நகரில் இன்று உடல் அடக்கம் நடக்கிறது.
அத்துடன் அடுத்த சில மணி நேரங்களில் ஈரான் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. குறிப்பாக ஈரானின் ரேடார் அமைப்புகள், வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்கியது.
இந்த தாக்குதல் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் மீண்டும் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, மோதல்கள் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.


















