கனடா- நாட்டிய கலாக்ஷேஸ்த்திரா நடனப் பள்ளி மாணவி சபரீணா தயானந்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது
கனடா- நாட்டிய கலாக்ஷேஸ்த்திரா நடனப் பள்ளியின் நிறுவனரும் குருவுமாகிய ஶ்ரீமதி தேனுஜர் திருமாறன் அவர்களின் மாணவி சபரீணா தயானந்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 05-07-2026 அ ன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோ சீனக்கலாச்சார மண்பத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அரங்கேற்றத்தின் தொகுப்பாளர்களாக ரமணன் சந்திரசேகரமூர்த்தி அவர்கள் செல்வி திருநேற்றா சபேசனும் பணியாற்றினார்கள்.
கனடாவின் புகழ்பெற்ற அணிசேர் கலைஞர்கள் வாய்ப்பாட்டு-மிருதங்கம். வயலின். புல்லாங்குழல் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இசைப்பிரிவுகளில் தங்கள் ஆற்றலை இசை வடிவங்கள் ஊடாக நேர்த்தியாக வழங்கவும் நாட்டியச் செல்வி சபரீணாவின் குரு தேனுஜா திருமாறன் அவர்களின் அர்ப்பணிப்புள்ள நட்டுவாங்கத்தோடு இணைந்து அரங்கேற்றம் நேர்த்தியாக நகர்ந்து சென்றது..
மண்டபம் நிறைந்த அரங்கேற்றமாக நடைபெற்ற இந்த விழாவின் பிரதம விருந்தினராக நடன ஆசிரியை அற்புதராணி கிருபைராஜ் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார்.
அரங்கேற்றத்தின் முதலாவது உருப்படியான புஸ்ப்பாஞ்சலி தொடக்கம் அனைத்து உருப்படிகளையும் நாட்டியச் செல்வி சபரீணா அவர்கள் தான் குருவிடம் கற்றுக் கொண்டது மற்றும் அரங்கேற்றத்தையொட்டிய சிறப்புப் பயிற்சிகள் மூலமாக தான் பெற்ற தெளிவான நுணுக்கங்களை அன்றை அரங்கேற்றத்தில் சமர்ப்பணம் செய்தார் என்பதும் பிரதம விருந்தினர் தனது உரையில் குறிப்பிட்டது எதிர்காலத்தில் அரங்கேற்றச் செல்வி சபரீணா அவர்கள் இன்னும் பல நுணுக்கங்களைக் கற்று சிறந்த நர்த்தகியாக விளங்குவார் என்ற நம்பிக்கையை இந்த அரங்கேற்றத்தை கண்டு களிக்க வந்தவர்களுக்கு தந்தது என்றால் அது மிகையாகாது























