கத்தார் நாட்டின் முன்னாள் அரசரான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி காலமானார். கத்தார் நாட்டின் முன்னாள் அரசராக இருந்தவர் ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி திடீரென்று காலமானார். அவருக்கு வயது 74. அவர் மறைவுக்கான காரணம் எதுவும் அந்நாட்டின் அரசு ஊடகம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. 18 ஆண்டுகளாக அரசராக இருந்து, சிறிய, வளைகுடா நாட்டை உலக அளவில் பல்வேறு துறைகளிலும் முன்னணி நாடாக வளம் பெற செய்த அவர், 2013-ம் ஆண்டு ஜூனில் ஆட்சியை விட்டு இறங்கினார். அவருடைய மகனிடம் ஆட்சியை வழங்கி விட்டு ஒதுங்கினார். அதற்கு முன்பு, எரிசக்தி வளம் கொண்ட நாட்டை கட்டமைத்த பெருமைக்குரியவர். கத்தார் நாடு, 2022-ம் ஆண்டு பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரை நடத்தி காட்டியது. அந்நாட்டின் அரசியல் தொடர்பு, இன்றளவில் வடக்கு ஆப்பிரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை நீண்டுள்ளது. எனினும், ஷியா பிரிவினருக்கான அதிகாரத்துவம் கொண்ட நாடான ஈரான், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு மற்றும் எகிப்து நாட்டின் தடை செய்யப்பட்ட முஸ்லிம் பிரதர்ஹூட் போன்ற அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை வைத்து கொண்டார். அவருடைய இந்த சுதந்திர போக்குடனான கொள்கையால், பிராந்திய அளவிலும் மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்படும் வகையில் கசப்புணர்வையும் ஏற்படுத்தி கொண்டார்.


















