(ந.லோகதயாளன்)
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோபிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது.
இம் மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்ம்ணிப் புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரிகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு 21 ஆம் திகதி வருகை தரும் குழுவினர் 22 ஆம் திகதி செம்மணி புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் செம்மணியை பார்வையிடும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்னும் சிவில் செயல்பாட்டாளர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.


















