பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரை சிம்மக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை மையத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஒரு இடமல்ல பல இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது.” என்றார்.


















