தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பரினகொச்சோஸ் மாகாணம் உபஹசொ நகரில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் 66 கிலோ மீட்டர் ஆழத்தில் அண்டெஸ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அந்நாட்டின் ஐகா, ஆர்கியுபா ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.















