அடுத்த வாரம் கனடா வருகின்ற இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனடிய நிதி மற்றும் தேசிய வருமான அமைச்சருமான François-Philippe Champagne அவர்களைச் சந்தித்து இரு தரப்பு நிதி மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பாக உரையாடுவார்.
இந்த சந்திப்பு ரொறன்ரோவில் இடம்பெறும் என்றும் அவரது வருகையின்போது ரொறன்ரோவில் உள்ள பல்லின பத்திரிகையாளர்களையும் சந்தித்து உரையாடுவார் என அறியப்படுகின்றது.
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,ஆகஸ்ட் 26-27 தேதிகளில் கனடாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீடுகள், வர்த்தகம் மற்றும் நிதி ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ரொறன்ரோவில் நடைபெறும் முதல் ‘பொருளாதார மற்றும் நிதி உரையாடலில்’ (Economic and Financial Dialogue) அவர் பங்கேற்கிறார்..
மேலும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடாவில் தங்கியிருக்கும் வேளையில் இங்குள்ள கனரக தொழிலதிபர்கள் மற்றும் இந்தோ-கனடிய வர்த்தகப் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாகவும் அறியப்படுகின்றது.















