யாழ். பல்கலைக் கழக வீதியில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரின் மகனால் சட்டத்திற்கு உட்பட்ட பதிவுகள் எவையும் இன்றி இயங்கும் உணவகம. தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியில் பல்கலைக் கழக மாணவிகளின் தங்கு விடுதிக்கு எதிர் திசையில் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் எந்த விதமான அனுமதிகளும் இன்று உணவகம் ஒன்று மாவட்ட அரச அதிபரின் மகனால. நடாத்தப்படுவதாகவும் இக் கட்டிடம் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் அமையப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்படும் சட்ட விரோத உணவகத்திற்கு எதிராக மாநகர சபையோ அல்லது உறுப்பினர்களோ நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுடன் இது மாவட்ட அரச அதிபர் என்பதனால் பக்கச் சார்பாக நடாப்பதாகவும் சுட்டிக் காட்டியே முறையிடப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த விடயத்தை உடன் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு அது தொடர்பில் தமக்கும. அறியத் தருமாறு ஜனாதிபதி செயலகம் மாகாண அதிகாரிகளிற்கு எழுத்தில் அறிவித்துள்ளது.
















