சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகி உள்ளது. சுந்தர் சி. இயக்கும் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி, சினேகா, யோகி பாபு, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அவினி சினிமேக்ஸ், நயன்ரதாரா, ஐவி என்டர்டெய்ன்மெண்டு இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பட வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. முன்னோட்டத்தில் நயன்தாரா பயந்த சுபாவம் கொண்ட பெண் காவலர் மற்றும் அம்மனாக இருவேறு பரிணாமங்களில் நடித்துள்ளார். ரெஜினா மற்றும் துனியா விஜய் ஆகியோர் தீய சக்திகளாக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னோட்டம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ள நிலையில், இப்படம் அடுத்த மாதம் 6-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது. ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை தமிழில் விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
















