கனடிய விமான நிலையங்களில் ஊழியர்களின் தட்டுப்பாடு காரணமாக விமான சேவைகள் பல இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது கனடிய விமான நிலையங்கள் பலவற்றில். தாமதங்கள் மற்றும் விமான சேவைகள் பல இரத்துசெய்யப்படுதல் ஆகியன தொடர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விமானப் பணியாளர்களின் தொழிற்சங்கப் பிரமுகர்கள் கனடிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
குறைந்த ஊதியம் மற்றும் மோசமான வேலை நிலைமைகள் தொழில்துறையில் பல தொழிலாளர்களுக்கு இறுதி முடிவாகவும் அவர்களில் பலர் வேலையை இழக்கச் செய்வதற்கு காரணமாக அமையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதைத் தொடர்ந்து தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் வரவிருக்கும் மாதங்களில் வேலைநிறுத்தங்கள் அல்லது வேலை நீக்க நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று தொழிற்சங்கங்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1,000 விமானப் பணிப்பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனேடிய பொது ஊழியர்களின் உள்ளூர் தொழிற்சங்கத்தை வழிநடத்தும் ரெனா கிஸ்பால்வி, விமான நிலையங்களில் நிலவும் குழப்பம், தொழில்துறை முழுவதும் உள்ள பணியாளர் போராட்டங்களுடன் தொடர்புடையது என்பது தெளிவாகிறது என்றும் பணியாளர்கள் போராட்டங்கள் அல்லது வேண்டுகோள்கள் கவனிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
“நான் அதற்கு ஒரு முடிவை காணமுடியும் என்று நம்பவில்லை. இது மெதுவாக மீண்டும் சிக்கல்களை உருவாக்கும், ”என்றும் அவர் கூறினார்.
பல தொழிலாளர்கள் ஏற்கனவே தொழிலை விட்டு வெளியேறும் விளிம்பில் உள்ளனர் என்றும் கிஸ்பால்வி கூறினார், மேலும் பின்தங்கியவர்களின் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. முதலாளிகள் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து சிறந்த ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் பற்றி எவ்வித அறிவிப்பும் வராமல் இருப்பதால் இனி வரும் மாதங்களில் விமான போக்குவரத்து துறையில் வேலைநிறுத்தங்கள் மற்றும் வேலை நடவடிக்கைகள் மிகவும் பொதுவானதாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
“இது கொதிநிலை,” என்றும் அவர் சொன்னார் .இதில் பல விமான நிலையங்களில் பாதுகாப்புப் பரிசோதகர்கள், இரண்டு விமான நிலையங்களில் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.
ஏறக்குறைய 2,000 விமான நிலையப் பாதுகாப்புத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யுனைடெட் ஸ்டீல்வொர்க்கர்ஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் டேவிட் லிப்டன், தனது கருத்தை தெரிவிக்கும் போது தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் பல விமான நிலையங்களில் பேரம் பேசுகிறார்கள், ஒட்டாவா விமான நிலையம் உட்பட, அண்மையில் விமான நிலையங்களின் நிர்வாகம் அறிவித்த சலுகை தொடர்பான விடயங்கள் தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அது போதுமான உயர் ஊதிய உயர்வை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். .
இந்த இறுக்கமான விமான நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர் கூட்டத்திலிருந்து, பல தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்குச் செல்கிறார்கள், மீதமுள்ளவர்கள் அதிக வேலைகளைச் செய்த நிலையில் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர் லிப்டன் கூறினார்.
விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பரிசோதனைகள் செய்யும் கடமைகளைச் செய்பவர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கினால் நிலைமை எப்படி இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, என்றும் அவர் கூறினார் – கனடா தொழில்துறை உறவுகள் திணைக்களம் இது பற்றிய அறிவிப்பில் அவர்களின் வேலை எவ்வளவு அவசியமானது என்று தீர்மானிக்க வேண்டும். எனவே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு அதரவுஅளித்தால் , அவர்கள் வேலையை விட்டு முழுமையாக வெளியேறுவதற்கு காரணமாக கருதப்படலாம் என்றும் , லிப்டன் கூறினார்.
வின்னிபெக் மற்றும் எட்மண்டன் விமான நிலையங்களில் டீம்ஸ்டர்ஸ் கனடா பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூட விரைவில் விமான நிலையங்களின் நிர்வாகத்துடன் பேரம் பேச முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வான்கூவர் விமான நிலையத்தில், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள்”மிகக் கடினமான” பேரம் பேசுவதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுமார் 4,000 விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மெஷினிஸ்ட்கள் மற்றும் விமானப் பயணப் பணியாளர்களின் சர்வதேச சங்கத்தின் தலைவர் டேவ் ஃப்ளவர்ஸ் கூறினார்.
கனேடிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் (CATSA) ஒப்பந்ததாரரான Allied Universal, ஒப்பந்தத்தின் முதல் வருடத்திற்கு எவ்வித உயர்வையும் வழங்கவில்லை என்று தலைவர் ஃப்ளவர்ஸ் தெரிவித்துள்ளார் . இதற்கிடையில், ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் தொழிலாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். அண்மையில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடுமையான பரிசோதனைகளைச் செய்பவர்கள், ஆகியோர். விமான நிலையத்திற்கு வெளியே அதிக ஊதிய உயர்வு மற்றும் வேறு நிபந்தனைகளை முன்வைத்து பேரணி நடத்தினர்.
இது இவ்வாறிருக்க, கடந்த ஆறு வாரங்களில் வெற்றிகரமான மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு மூலம் மே மாதத்தில் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது,” என்று விமான நிலையங்களின் நிர்வாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்
முன்னாள் Air Canada நிர்வாகியும், McGill பல்கலைக்கழகத்தின் Global Aviation Leadership Program இன் தலைவருமான ஜோன் இது தொடர்பாக தகவல் தருகையில் கடந்த பத்தாண்டுகளில், விமானப் போக்குவரத்துத் துறையில் துணை ஒப்பந்ததாரர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஊதியம் குறைந்துள்ளது என்றும் இதனால் நிரந்தர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.