– மரநடுகைமாதச் செய்தியில் பொ. ஐங்கரநேசன் –
மரங்கள் மனிதர்கள் உயிர் வாழுவதற்குத் தேவையானபிராணவாயுவைத் தரும்; கரிப்பிடிக்கும்காற்றைச் சுத்திகரிக்கும்; வெம்மைதணிவிக்கமழையைத் தரும் என்றுகற்றுத்தருகின்றஅறிவியலும்,வெட்டுமரங்களாகக் கைநிறையக் காசுதரும் என்றுபோதிக்கும் பொருளியலும் மரங்களுக்கும் எங்களுக்கும் இடையேகாலங்காலமாக நிலவிவந்த பண்பாட்டு உறவைத்துண்டித்து விட்டன. மரங்களுடனான பண்பாட்டு உறவே மரங்கள் மீதானபற்று தலைவளர்க்கும். இழந்துவிட்ட இந்தப் பண்பாட்டுஉறவைமீட்டுருவாக்கும் ஓர் தமிழ்த்தேசியச் செயற்பாடேகார்த்திகைமாதமரநடுகைஆகும்என்றுதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
வடக்குமாகாணசபையால் 2014ஆம் ஆண்டுநிறைவேற்றப்பட்டதீர்மானத்துக்குஅமைவாகக் கார்த்திகைமாதம் வடமாகாணமரநடுகைமாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதைமுன்னிட்டுபொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ளஊடகச் செய்தியிலேயே இவ்வாறுதெரிவித்துள்ளார்.
அந்தஊடகச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்கும் மரங்களுக்கும் இடையேயிருந்தபண்பாட்டுப் பந்தம் மிகவும் உணர்வுபூர்வமானது. மூதாதித் தமிழர்கள் மரங்களை இறையாகவழிபட்டார்கள்.உருவவழிபாடுஆரம்பித்ததும் மரங்களை இறைக்குநிழற் குடைகளாக்கிவலம் வந்தார்கள். மரங்களைக் குலக் குறிகளாக்கிக் கொண்டாடினார்கள். போர்க்களத்தில் பூமாலைகள் அணிந்தேஎதிரிகளுடன் பொருதினார்கள்.
மங்கையர்கள்மரங்களைக் காதலர்களாகஉருவகித்துநாணிநின்றார்கள.; மறைந்த உறவினர்களின் நினைவுகளை மரங்களில் ஏற்றிக்கைதொழுதார்கள். ‘ஒருமரத்தைஅழித்துத்தான் என் உயிரைக் காப்பாற்றவேண்டுமெனில் மரம் வாழட்டும்;நான் சாகிறேன்’என்றசங்கப் புலவனின் வாரிசுகளானநாமோ, இன்றுஎவ்விதக் கருணையும் இன்றிமரக் கொலைகளைச் செய்துவருகிறோம். அறிவியல் வளர்ச்சிமரங்களுடன் நாம் கொண்டிருந்தபண்பாட்டுஉறவைப் புறமொதுக்கியுள்ளது. அறிவியல் எப்போதும் அபிவிருத்தியின் பக்கம் சார்ந்ததாகவே இயங்கும். அபிவிருத்திதன் பாதைக்குக் குறுக்காகநிற்கும் எதனையும்,அதுமனிதர்களாக இருந்தாலும் அழிப்பதற்குத் தயங்காது.
இதனாலேயேவீதிஅகலிப்பின்போதும்,தொலைத்தொடர்புவழித்தடங்கள்,மின்வழித்தடங்களைஅமைக்கும் போதும் மாற்றுவழிபற்றிச் சிந்திக்காதுமரங்களைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சாய்த்துவருகிறோம்.
உலகம் பூமி சூடேறிக் கொண்டிருப்பதால் படுபாதகமான காலநிலை மாற்றங்களை இன்று எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. இன்னொருபுறம்; காட்டு வைரசுக்கள் விகாரிகளாகித் தாக்குவதால் கொரோனா, சார்ஸ்போன்ற கொடிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இப்பேரிடர்கள் யாவும் காடுகளை அழித்ததால், இயற்கையைச் சிதைத்ததால் ஏற்பட்டதன் விளைவுகளே என அறிவியல் மெய்ப்பித்ததன் பின்னர், இப்போதுகாடுவளர்ப்பும்மரங்களின் நடுகையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இம் முயற்சிகள் தனியே அறிவியல் அணுகுமுறையுடன் மாத்திரம் அமையாதுபண்பாட்டுப் பிரக்ஞையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மரநடுகையைமேற்கொள்வதற்குக் கார் என்றமழையின் பெயரைத் தன்பெயராகக் கொண்ட கார்த்திகைமிகப் பொருத்தமானமாதம். அறிவியல் ரீதியானகாரணத்துக்கும் அப்பால்,ஈழத்தமிழர் வாழ்வியலில் கார்த்திகைபண்பாட்டுமுக்கியத்துவம் பெற்றஓர் மாதமுமாகும். வீடுகளில் விளக்கேற்றிவழிபடும் தீபத்திருநாளையும், இறந்தமறவர்களின் நினைவுகளைப் நெஞ்சிருத்திநெக்குருகும் நாட்களையும் இம்மாதம் தன்னகத்தேகொண்டுள்ளது. தேசியம் என்பது ஒரு இனத்தின் வாழ்புலம்,மொழி,வரலாறு,பண்பாடு,நம்பிக்கைகள் ஆகியனபின்னிப்பிணைந்த ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில் கார்த்திகையில் மரநடுகைதேசத்தை மாத்திரமல்ல் தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.