(11-11-2021)
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் சிறிய தாய் இன்றைய தினம் வியாழக்கிழமை (11) காலை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
-மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி எம்.அன்னைமேரி(வயது-70) என்பவரே திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
-இறுதி நல்லடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.






















