(11-11-2021)
குடும்பத் தகராறு நீண்டதில் கணவன், தனது மனைவியை பொல்லு ஒன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று மாத்தறை – மாலிம்பட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாலிம்பட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹகொடகே தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (11) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் மாலிம்பட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






















