கோவிட்- 19 தொற்றும் ஒமிக்கிறோன் கிருமியின் பரவலும் வேகமாகப் பரவி வருவதால், விடுமுறைக் காலத்தில் ஒன்றுகூடுவதை சிறியதாக வைத்திருக்குமாறு ஒன்றாரியோ வாழ் மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் என ஒன்றாரியோ மாகாணத்தின் சுகாதார தலைமையகம் அறிவித்துள்ளது
நவம்பர் மாதத்தில் பிறகு, ஒன்றாரியோவில் “ஜனவரி தொடக்கத்தில்” ஆதிக்கம் செலுத்தும் டெல்டா கிருமி அதிகரிப்பை ஒமிக்கிறோன் முழுமையாக மாற்றியமைக்க முடியும் மற்றும் ஏற்கனவே 10 சதவீத தொற்றாளர்களைக் கொண்டதாக உள்ளதாகவும் ஒன்றாரியோ மாகாணத்திதன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மூர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆனால் அவர் ஒன்றுகூடல்கள் மற்றும் சமூக நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் வண்ணம் எந்தவிதமான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை என்றும் அறியப்படுகின்றது- இப்போது உள்ளக அரங்குகளில் 25 பேர் ஆகவும் வெளியிடங்களில் அல்லது பொது இடங்களில் 100 பேர் ஆகவும் கட்டுப்பாடுகள் அமைந்துள்ளது – அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என அவர் அறிவித்ததால், ஒன்றாரியோ வாழ் மக்கள் குறைந்தது 18 வயது நிரம்பியவர்கள் ஜனவரி 4 தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் அறியப்படுகின்றது






















