(04-04-2022)
ஆளும் அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கையினால் நாட்டு மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை கோறியும்,தொடர்ந்தும் அரசாங்கம் ஆட்சியில் இருக்க்க் கூடாது என்றும் வலியுறுத்தி புத்தளம் கொழும்பு முகத்திடலில் இன்று மக்கள் எதிர்ப்பாட்டம் இடம் பெற்றது.
காலை 10.00 மணிக்கு இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இடம் பெற்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டா கோ,பஷில் போ,ராஜபக்ஷ குடும்பம் நாட்டை விட்டு ஓடு போன்ற கோஷங்களை முழங்கியும்,அரசுக்கு எதிரான மற்றும் அரசுக்கு ஆதரவு வழங்கிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பதாகைகளும் இதன் பொது ஆர்ப்பாட்டக்கார்ர்களினால் காட்சி படுத்தப்பட்ட்டிருந்தது.
தாங்கள் அரசுக்கு வாக்களித்தமை செய்த பெரும் தவறு என்றும்,இந்த தவரை நிவர்த்திக்கும் வகையில் ஆட்சியாளர்கள் ஆட்ச்சி கைவிட்டு ஓடுமாறும்,பொருட்களை விலையேற்றம் பெபரும் அழிவினை ஏற்படுத்தியுள்ளதாகவும் எழுதப்பட்ட பதாகைகளில் காணமுடிநதது.






















