இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் தணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார். அதில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதே மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளது. மேலும் படத்தை தணிக்கைக்குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பியுள்ளது. விஜய் நடிப்பில் உருவான திரைப்படங்களில் வெளியீட்டுக்கு 22 நாட்களுக்கு முன்பே தணிக்கைக்கு விண்ணப்பித்த திரைப்படம் என்ற பெயரை லியோ பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு சான்றிதழ் கிடைக்கப் போகிறது என்பதை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் விரைவில் படத்தின் முன்னோட்டத்தை வெளியிட உள்ளனர். அதைத் தொடர்ந்து அடுத்த பாடல் என விஜய் ரசிகர்களுக்கு லியோ தயாரிப்பு நிறுவனம் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறது.