இயக்குனர் சாந்தகுமார். இவர் தற்போது ‘ரசவாதி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் முன்னோட்டம் மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் முன்னோட்டத்தை திரைத்துறை பிரபலங்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.