தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் முன்னோட்டத்தில் “சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது!” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ‘டிஎன் 2026’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.






















