மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் நாடு எதிர்கொண்டு வரும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த சவால்களை சமாளிக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். டில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: அரசியலமைப்பின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புலனாய்வு அமைப்புகள் அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும், தொந்தரவு செய்யவும், ஒடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதார சூழல் மிகவும் மோசமாக உள்ளது., வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான அளவில் புதிய முதலீடுகள் வரவில்லை . தேர்வு முறையில் நிலவும் கடுமையான நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைகளும், எதிர்கால கனவுகளும் சிதைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 17-ம் தேதி மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த தீங்கிழைக்கும் மசோதாக்களை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் செயல்பட்டோம். அப்போது நமது ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் தெளிவாக வெளிப்படுத்தினோம். அதே ஒற்றுமை உணர்வை இப்போது மேலும் வலுப்படுத்தி முன்னேற வேண்டும். மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் உருவாகியுள்ள பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியது அவசியம். அரசியலமைப்பின் மீதான தாக்குதல் இடைவிடாமல் தொடர்கிறது. புலனாய்வு அமைப்புகள் அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும், தொந்தரவு செய்யவும், ஒடுக்கவும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநில அரசுகள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. தேர்வு முறை முழுமையாக சீர்குலைந்துள்ளதால் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக் கொள்கை மதிப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.






















