முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை விஜய் சந்தித்துள்ளார். டில்லியில் இன்று(11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டுச் சென்றார். டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற அவர், காவல்துறை வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து டில்லி அதிபர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். மரியதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






















