பெண்களின் பாதுகாப்பு, உரிமை, கல்வி, மேம்பாடு சம்பந்தமாக பேசி இருப்பதனால் ஆட்டி திரைப்படம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆட்டி திரைப்படம் பெண்கள் கொண்டாடும் வெற்றித்திரைப்படமாக மாறியிருக்கின்றது. இந்த வெற்றியை நம் சமூகத்தின் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம். தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கெடுக்கும் பெண்கள் நம் குலதெய்வங்கள். என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள். ஒரு பெண்ணாகவும் சரி, ஆணாகவும் சரி இந்த ஆட்டி திரைப்படத்தை நம் சமுதாய பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் அனைவரினதும் தலையாய கடமையாகும். பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் இந்த காலகட்டத்தில் தற்பொழுது தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உருவாக்கியுள்ள சிங்கப்பெண் சிறப்புப்படை பெண்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருப்பதைப்போன்று, தற்பொழுது பெண்களுக்கு புத்துணர்ச்சியும் தைரியமும் அளிக்கும் வகையில் திரைக்கு வந்துள்ள ஆட்டி திரைப்படமானது குடும்பங்களால் கொண்டாடப்படுவது ஆச்சரியத்திற்குரியதல்ல. நாமும் குடும்பமாக சென்று திரையரங்குகளில் ஆட்டி திரைப்படத்தை கண்டுகளிப்போம். தமிழ்பெண் வீரவரலாற்றைப் போற்றி வணங்குவோம். இந்த நல்லதொரு படைப்பை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் இன்னும் படம் பார்க்காத ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டுகிறோம். என்று படகுழுவினர் தெரிவித்தனர்.






















