அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கடந்த 20-06-2026 அன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘நாட்டிய விஷாரத்’ ஶ்ரீமதி விக்னேஸ்வரி ஜெயகாந்தி அவர்களின் மாணவி செல்வி அக்ஷரா ஹரிகரன் அவர்களது பரதநாட்டிய அரங்கேற்றம் இசையும் கலையும் பரதமும் கலந்த ஒரு தெய்வீக மேடை நிகழ்வாக நடைபெற்றது குறித்து அரங்கேற்றத்தில் கலந்து சிறப்பித்தவர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளார்கள்.
நீண்ட காலமாக அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ‘ருக்மினி நர்த்தனாலயம்’ என்னும் பரத நடனப் பள்ளியை நடத்திவரும் ‘நாட்டிய விஷாரத்’ ஶ்ரீமதி விக்னேஸ்வரி ஜெயகாந்தி அவர்கள்,இது வரை பல அரங்கேற்றங்களை நடத்தியுள்ளார். தனது அரங்கேற்றங்கள் ஒவ்வான்றுக்கும் தமிழ்நாட்டிலிருந்தும் கனடாவிலிருந்தும் பக்கவாத்தியக் கலைஞர்களை அழைப்பதிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்துவரும் கலைஞர்களுக்கும் மதிப்பளிக்கும் நோக்கோடும் செயற்பட்டு வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
செல்வி அக்ஷரா ஹரிகரன் அவர்களத பரதநாட்டிய அரங்கேற்றச் செல்வி அக்ஷரா ஹரிகரன் அவர்களது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு இலங்கையிலிருந்து மிருந்தங்கக் கலைஞரும் பரதநாட்டியக் கலைஞரும் கொழும்பில் சொந்தமாக பரத நடனப் பள்ளியொன்றை நடத்திவரும் திவ்யா கஜேன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில் ‘நாட்டிய விஷாரத்’ ஶ்ரீமதி விக்னேஸ்வரி ஜெயகாந்தி அவர்ளையும் அரங்கேற்றச் செல்வி அக்ஷரா ஹரிகரன் அவர்களையும் பாராட்டி தான் எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து பறந்து வந்ததன் பலனை இந்த அரங்கேற்றத்தை மிகவும் அமைதியாகவும் அவதானமாகவும் அமர்ந்திருந்து ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் கிடைத்த சில மணிநேரத்தில் அனுபவித்தேன்’ என்றார் . அவர் தனது உரையில் பரதநாட்டிய அரங்கேற்றம் என்பது ஒரு நடனக் கலைஞரின் பரதப் பயணத்தின் இடை நிலை என்னும் அன்றைய அரங்கேற்ற நாளிலிருந்து தான் அக் கலைஞருக்கு பல பொறுப்புக்கள் வந்து சேர்க்கின்றன என்றும் இனிமேல் தான் தனது குரு மற்றும் பெற்றோர் மற்றும் சுற்றியுள்ள சமூகம் ஆகியோருக்கு தன்னை நிரூபிக்கும் பாரிய கடமை உள்ளது என்றும் தெரிவித்தார்.
தீவிர பயற்சி பெற்ற அரங்கேற்றச் செல்வி அக்ஷரா ஹரிகரன் அவர்களது பரதநாட்டிய உருப்படிகள் அனைத்து கண்களுக்கும் காதுகளுக்கும் மாத்திரமன்றி ஒவ்வொரு பார்வையாளரின் இதயங்களிலும் ஒரு இன்ப அலைகளை தோற்றுவித்தன என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்படி செல்வி அக்ஷரா ஹரிகரன் அவர்களது பரதநாட்டிய அரங்கேற்றத்தில் எடுக்கப்பெற்ற சில படங்கள் இங்கு காணப்படுகின்றன


















