லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும், லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘டிசி’ படத்திலிருந்து வெளியான ‘ராகா ஆப் ரிவெஞ்’ மற்றும் ‘ஹேங்க் ஓவா’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘டிசி’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், வன்முறை நிறைந்த ஆக்சன் திரைப்படமாக ‘டிசி’ ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்க தயாராகியுள்ளது. முன்னதாக வரும் ஜூலை 31ம் தேதி படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘டிசி’ படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


















