ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் முதல் பாடல் ஜூலை 28ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம், இதுவரை ‘தனுஷ் 55’ என்ற தற்காலிக பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘ஓம்’ படத்தின் தலைப்பு பதாகை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஓம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது. தனுஷ் மற்றும் மம்முட்டி தொடர்பா காட்சிகள் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இறுதி கட்ட பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்டுள்ளார். இந்த தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. தனுஷின் 55-வது திரைப்படமான ‘ஓம்’ படத்தின் முதல் பாடல் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
















