சென்னை,ஆக.12- ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் திருநெல்வேலியில் மனுஜோதி ஆசிரமத்தை நிறுவினார். இங்கே ஜாதி, இன, நிற, மொழி, வேறுபாடின்றி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, உன்னதமான கொள்கையான ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கோட்பாட்டினை நிலைநாட்டினார்.
இங்கே வெளியிடப்படும் ஆன்மீக புத்தகங்களை உலகத்தின் எல்லா திசைகளுக்கும், இவர்கள் இலவசமாக கொண்டு செல்கின்றனர்.
ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி, கடந்த வாரம் ஜப்பான் நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் மற்றும் அநேக மக்களை சந்தித்து ஆன்மீக புத்தங்களை வழங்கினார். மேலும் தைவான் நாட்டில் இருக்கும் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அவருடன் ரோஜர் தேவா இந்திரன், சுரேஷ், தாமஸ் ரெங்கசாமி மற்றும் சீயோன் ராஜா ஆகியோர் உள்ளனர்.















