முனீஸ்காந் நடிக்கும் “த டோர்ம்” படத்தின் பதாகையை வெளியிட்டனர். ‘சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, டார்லிங்-2, மாநகரம், டிடி ரிட்டன்ஸ், கேங்கர்ஸ்’ போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் சமீபத்தில் ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி டோர்ம்’. இதில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, பெரோஜ் என பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். குட் ஸ்டப் புரொடக்சன்ஸ் சார்பில் ஈ.ஆர்.டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் முதல்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதை விஜய் சேதுபதி அவருடைய கீச்சக தளத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
















