“புரட்சித்தீயை பற்றவைத்த வீரத்தமிழச்சி” செங்கொடிக்கு சீமான் வீரவணக்கம் தெரிவித்தார். இது குறித்து நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண்! தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர், தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது அதைக் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, தன் உடலுக்குத் தீயிட்டு, ஒரு புரட்சித்தீயை இந்த நிலத்தில் பற்றவைத்த பெரும் நெருப்பு! தமிழர் பண்பாட்டு மரபில் தன்னைச் சார்ந்தவர் நலன் காக்க தம்முயிர் துறந்து தெய்வங்களான தமிழின முன்னோர்கள் போல, இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்து உலகத்தமிழர் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழும் நம் இனத்தின் காவல் தெய்வம்! தம்முயிரையே ஈகம் தந்த புனிதப்போராட்டத்தின் மூலம் எழுவர் விடுதலைக்கு வித்திட்ட வீரத்தமிழச்சி தங்கை செங்கொடிக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்துவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
















