இயக்குநர் அடூர் பாலகிருஷ்ணன், நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவான ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்முட்டி தமிழில், மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மம்முட்டி, மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதுடன் கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்தும் வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ‘பேட்ரியாட்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றது.
மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய ‘அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்முட்டி கூட்டணி 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது. அடூர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘பாதயாத்திரா’ திரைப்படத்தை மம்முட்டியே நடித்து தயாரிக்கிறார். இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தின் காக்கநாடு பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் அடூர் பாலகிருஷ்ணன், மம்முட்டி கூட்டணியில் உருவான ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.
















