ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், ப்ரீத்தி பகடாலா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருதையும் பல்வேறு திரைப்பட விருதுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், அநீதி, ரசவாதி மற்றும் போர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் நடித்த கான் சிட்டி, ஒன்ஸ்மோர் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாயின.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘மைக்கேல்’ திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ப்ரீத்தி பகதாலா கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய பேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது.
















