அக்சய் குமார், சயிப் அலிகான் நடிப்பில் உருவாகும் ஹைவான் திரைப்படம் 7 நாட்களில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பிரபல இந்தி நடிகர்கள் அக்சய் குமார், சயிப் அலிகான். இருவரும் இணைந்து ஹைவான் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். 2016ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒப்பம் படத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஹைவான் படத்தில் ஷிரியா பில்கோன்கர் , சாயாமி கேர் ஆகிய நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ. 115 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு ஆனது. இந்நிலையில், ஹைவான் திரைப்படம் வசூல் ரீதியில் எதிர்பார்ப்பை எட்டவில்லை. அதன்படி, கடந்த 7 நாட்களில் ஹைவான் படம் உலக அளவில் ஒட்டுமொத்தமாக ரூ. 15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
















