மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு வழங்குமென ஜி.கே,வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். காமராஜர், மூப்பனாரின் எண்ணங்களுக்கு ஏற்ப வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன். 60 நாண்டுகளுக்கு பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக தமிழக வெற்றி கழக ஆட்சி உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என அதில் கூறியுள்ளார்.
















