போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் உள்ளிட்டோர் கடந்த ஆக. 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதே குற்றச்சாட்டில் ஜெம் வீரமணி உதவியாளர் கணேசன் கடந்த வாரம் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஜெம் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல் ராஜ் உத்தரவிட்டுள்ளார். ஜெம் வீரமணி மீது ஏற்கனவே 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இவர்களுடன், சென்னை பெருநகரில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த நபர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மேலும் 11 பேரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
















