(29-09-2026)
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் கேரதீவு சங்குப்பிட்டி பாலப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் காவலர் ஒருவர் 29-09-2026 அன்று பலியானார்.
பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மன்னாரைச் சேர்ந்த 31 வயதான ஆர்னோல்ட் அன்ரனி என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் செலுத்திதச் சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்னாரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது டன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
















