நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மாநிலங்களவை நியமன எம்.பி. பதவியைப் பெற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லதா ரஜினிகாந்த் கல்வி நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தப் பணிகளின் அடிப்படையில் மாநிலங்களவை நியமன எம்.பி. பதவியை பெற அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக டில்லியில் சில முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரை அவர் சந்தித்துள்ளதாகவும், அடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
















