இளைஞர்களைக் கண்டு மத்திய பாஜக அரசு பயப்படுகிறதென கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இளைஞர்களைக் கண்டு மத்திய பாஜக அரசு பயப்படுகிறது. இந்தியாவின் இளைஞர்களின் கூர்மையான கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. தற்போதைய சூழ்நிலை, வாய்ப்புகள் இல்லாதது, குறிப்பாகத் தேர்வு முறையில் இப்போதும் நிலவும் அநீதி மற்றும் இந்த அரசின் தன்னிச்சையான போக்கு ஆகியவற்றால் இளைஞர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நிலைமையை மதிப்பிட்டு அதற்கேற்ப தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம். இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் மீண்டும் கூடி உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதன் வடிவமைப்பு, குறிப்பாக 6 மற்றும் 7 படிவங்கள் குறித்த விவகாரங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட இந்தியா கூட்டணி அனைத்து அமைப்புகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
















