கலையரசன், கயல் ஆனந்தி நடித்த “டைட்டானிக்” படம் அக்டோபர் 16ந் தேதி வெளியாகவுள்ளது. மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜானகிராமன் இயக்கத்தில், ‘டைட்டானிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயிண்ட்மென்ட் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ‘டைட்டானிக்’ படம் அக்டோபர் 16ம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
















