தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுனர் அர்லேகரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.வி.அர்லேகரை தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தின் முழுநேர ஆளுனராக பொறுப்பேற்றுள்ள அர்லேகரை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்துள்ளார். இதற்காக கிண்டி மக்கள் பவனுக்கு வந்த அவர், ஆளுனர் அர்லேகரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
















