சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் அவர் ஒன்றை மறந்து விட்டார் போலும்!
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அவர்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதிகளாக பணியாற்றிய அனைவரும் காவி உடையில் கை வைக்கவில்லை. உண்மதான்.
ஆனால் அவர்கள் அனைவரும் தேசத்தின் நிதிக் குதமாக விளங்கிய ‘கஜானா’வில் கைவைத்து விட்டார்கள். அவருடைய தந்தையார் காலத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கா விட்டாலும் பிரேமதாச அவர்கள் கிராமப் புற மக்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் தனது நாளாந்தப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அதற்கு மேலாக தமிழ் விடுதலை இயக்கங்களை கையாள வேண்டியிருந்தது. அத்துடன் பின்னாளில் இந்திய சமாதானப் படை என்னும் தேவையற்ற ஒரு வெளிநாட்டு ஊடுறுவலை நாட்டிலிருந்து அகற்ற வேண்டிய பணிகள் அவருக்கு முன்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தன..
ஆனால், மைத்திரிபால சிறிசேனா, மகிந்தா ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபாய ராஜபக்ச ஆகிய நால்வரும் ஒருவர் மற்றவர்களைப் பார்த்து தேசத்தின் நிதியை திருடிச் சென்றார்கள். இவ்வாறு திருட்டுக்களில் ஈடுபடுவதற்கு பௌத்த பீடங்களின் மறைமுக ஆதரவு இந்த நால்வருக்கும் அவசியம் தேவையாக இருந்தது. இதனால; அவர்கள் பௌத்த மதகுருமார் செய்ய குற்றச் செயல்களை கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு தண்டனைகளை வழங்கவும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த தமிழ் மற்றும் முஸ்லின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இலஞ்சமாக’ வழங்கிய மில்லியன் கணக்கான ரூபாய்கள் கூட வெளிநாடுகளிலிருந்து அபிவிருத்தித் திட்டங்களுககு வழங்கப்பட்ட நிதியிலிருந்து ‘களாவாடப்பட்டவை’ என்பதும் அன்றைய நாட்களில் வெளியான ‘உண்மையான தகவல்கள் என்பதையும் இவர்கள் மறந்து விட்டார்கள்.
ஆமாம் சஜித் போன்றவர்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு ‘உணவுக்காக’ காத்திருக்கும் நா..கள் போல… பதவிகளை தட்டிப் பறிக்க அவர்கள் தயார்.
















