ஆன்மிக சுற்றுலா சென்றபோது பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் கட்பிராலி கிராமத்தை சேர்ந்த 23 பேர் வேனில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இந்நிலையில் ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் உள்ள காது ஷியாம் இந்து மத வழிபாட்டு தலத்திற்கு அதிகாலை வேனில் சென்றனர். ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்றபோது சிம்லியா கிராமம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறை, விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியபிரதேச முதல்-அமைச்சர் மோகன் அறிவித்துள்ளார்.
















