மன்னார் நிருபர்
(19-10-2026)
வென்னப்புவ உள்ளக விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை (17) காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகள் பங்குபற்றிய மாபெரும் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மன்னார் ASKO கராத்தே கழகத்தின் பிரதான ஆசிரியர் மத்தியாஸ் அன்ரனி இன்பராஜ் அவர்களது பயிற்சியில் அவரது மாணவர்கள் சுமார் 50 பேர் பங்குபற்றி 114 பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இந்த போட்டியில் ASKO கராத்தே கழகம் இரண்டாம் இடத்தை பெற்றதுடன் அதற்குரிய பரிசு நினைவு கிண்ணமும் வழங்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு மன்னார் மாவட்டம் சார்பாக ASKO கராத்தே கழகம் பங்கு வகித்ததுடன் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றதில் உப்புகுளம் , பள்ளிமுனை, மன்னார் நகரம், பட்டித்தோட்டம், கீரி, அடம்பன், பனங்கட்டு கொட்டு, மற்றும் ஜோசப்வாஸ் நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கராத்தே மாணவர்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னர் மாவட்ட கராத்தே வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை இதுவே முதல் தடவையாகும்.
















